கடாரம் கொண்டான் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய விக்ரம் !

கமல் ஹாஸன் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்த “கடாரம் கொண்டான்” ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம், படத்திற்கு படம் வித்தியாசம், மாறுபட்ட கதாப்பாத்திரம் என்று தனது ரசிகர்களை உற்சாகப் படுத்திக்கொண்டிருகிறார். இவர் கடாரம் கொண்டான் படத்தின் வெற்றியை அடுத்து தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளாராம். தற்போது விக்ரம் “இமைக்கா நொடிகள்” படம் புகழ் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போதைக்கு விக்ரம் 54 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சீயான் புகைப்படக் கலைஞராக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்நிலையில் கடாரம் கொண்டான் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் தற்போது 4 கோடி ரூபாய் தன் சம்பளத்தில் உயர்த்தியுள்ளார். அதாவது இதற்கு முன் 14 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் இனி 18 கோடி ரூபாயாக வாங்க உள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப் படுகிறது.