கடைசியில் நீங்களுமா? – ‘சூப்பர் டீலக்ஸ்’ பட இயக்குனரை பற்றி குமுறும் திருநங்கை!

ஒரு பக்கம் உலக சினிமாக்களுக்கு தமிழ் சினிமாவின் சவால் என்று வானளாவ புகழப்படும் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ சில கடுமையான வசவுகளையும் சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் முகநூலில் மிகவும் பிரபலமானவரான  சகோதரி ப்ரியா பாபு என்கிற திருநங்கை தனது பதிவில், திரு. விஜய்சேதுபதி அவர்கள் புடவை கட்டிக்கொண்டால் மட்டுமே திருநங்கையர் ஆகி விட மாட்டார். நீங்கள் அவர் மூலம் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் என்பது முக்கியம். தமிழ் திரை உலகம் இன்னும் திருநங்கையரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தான் உங்கள் படம் உணர்த்துகிறது. பொதுச் சமூகத்தில் பெரும்பான்மை அணியும் முகமூடிகளை அணிந்து திரியாமல் தன் உணர்விற்கு மதிப்பளித்து மிக நேர்மையாக தன் முடிவில் உறுதியாய் நின்று பெண்ணாகிப் போறவள் திருநங்கை. ஒரு பெண்ணை தன் சகோதரியாக மட்டுமே பார்ப்பவள். ஆனால் இதில் மாணிக்கம் (ஷில்பா) திருமணமாகி, குடும்பம் நடத்தி, குழந்தை சே ! உங்கள் சினிமா வெற்றிக்கு, கைதட்டலுக்கு வழக்கம் போலவே எங்களை பலிகாடாக்கி விட்டீர்களே! தியாகராஜன் குமாரராஜா.