Cine Bits
கணவருடன் சேர்ந்து கிரிக்கெட் படத்தில் நடிக்க தீபிகா படுகோனேவிற்கு 14 கோடி சம்பளம் !
1983-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவு அணியை தோற்கடித்து உலக கோப்பையை கபில்தேவ் தலைமையிலான அணி வென்றது. கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். கபில்தேவ் மனைவி வேடத்துக்கு நடிகை தேர்வு நடந்தது. இறுதியாக தீபிகா படுகோனை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு ரூ.14 கோடி சம்பளம் பேசி உள்ளனர். 83' படத்தில் முக்கியத்துவம் இல்லாத குணசித்திர வேடம் என்பதால் தீபிகா படுகோனே முதலில் தயங்கியுள்ளார். கணவர் கதாநாயகன் என்பதாலும் அதிக சம்பளம் கொடுத்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் தீபிகா படுகோனே !