கணவரை பிரிவதாக அறிவித்தார் பாலிவுட் நடிகை தியா மிர்சா !

அரவிந்த்சாமி நடித்த ’என் சுவாச காற்றே’ படத்தில் டான்சராக திரையுலக பயணத்தை துவங்கியவர் தியா மிர்சா. பின்னர் இந்தி சினிமாவுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தியாவுக்கும், தொழிலதிபர் சாகிலுக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி டெல்லியில் திருமணம் நடைபெற்றது. அவர்கள் 5 ஆண்டுகள் காதலித்தனர். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டு இருந்தது. இந்நிலையில் தியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை பார்த்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தியா மிர்சா தனது டுவிட்டில் ‘11 ஆண்டுகள் கழித்து தானும், கணவரும், பிசினஸ் பார்ட்னருமான சாகில் சங்காவும் பிரிவது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். பிரிந்துவிட்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம். இது குறித்து நாங்கள் மேலும் எதுவும் தெரிவிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். தியாமிர்சா இந்தியில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் பேசாத தியா கணவரை பிரிவதாக அறிவித்தது திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.