கணவர் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் !

நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான கிருஷ்ணவம்சி தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருப்பவர். இவர் 1998-ல் இயக்கிய சந்திரலேகா, 2004-ல் இயக்கிய ஸ்ரீ ஆஞ்சநேயம் படங்களில் நாயகியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அதன் பின் கணவர் இயக்கிய படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து கிருஷ்ணவம்சி இயக்கும் வந்தே மாதரம் என்ற படத்தில் நடிக்க போகிறார் ரம்யா. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அவிகா  கோர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.