கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி பின்னால் இருப்பதாக கருதுகிறேன் தனுஷ் !

துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், அது ஒரு கனாகாலம், பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, இப்போது பக்கிரி எல்லாமே இறைவன் அருளால் தானாக அமைந்துள்ளன. சில படங்கள் கஷ்டப்பட்டு நடிப்பேன். அந்த படத்தை விட சாதாரணமாக நடித்த படம் நன்றாக ஓடும். படங்கள் ஓடாவிட்டால் மனதுக்கு வருத்தமாக இருக்கும். தோல்வியை விட வெற்றியை கையாள்வதுதான் கஷ்டம். இப்போது அசுரன் படத்தில் நடிக்கிறேன். அடுத்து செல்வராகவன் படத்தில் நடிக்க உள்ளேன். கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி பின்னால் இருப்பதாக கருதுகிறேன்திரைப்படங்களுக்கு தணிக்கை தேவை இல்லை என்பதை நான் ஏற்கமாட்டேன். வன்முறை, முத்த காட்சிகளை எனது குழந்தைகளுடன் பார்த்து நெருடலாகி இருக்கிறேன். எனவே தணிக்கை அவசியம் இவ்வாறு அவர் கூறினார்.