கண் கலங்கிய மொட்டை ராஜேந்திரன்!

சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக இருந்தவர் மொட்டை ராஜேந்திரன். இவர் இயக்குனர் பாலாவின் கண்ணில் சிக்கி வில்லனாக மாற்றப்பட்டார். இன்று காமெடி நடிகர்களில் நம்பர் 1 ஆக, மிக பிரபலமாகி விட்டார். தற்போது படங்களில் முக்கியமான ஆளாக இருக்கும் அவர் முன்பு எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் நண்பர்களிடம் சகஜமாக பழகுகிறாராம். அடிக்கடி தன் நண்பர்களை சந்திக்கும் அவர், இப்போது தான் கடவுள் என்னை கண் திறந்து பார்க்கிறார் என சொல்கிறாராம். மேலும் முன்பு நான் மிகவும் பசியில் அலைந்தேன், இப்போது மிகவும் பிசியில் அலைகிறேன் என்று கண்கலங்கினாராம்.