கதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் தங்கை மகன் !

பொல்லாத உலகில் பயங்கர கேம்'. காமெடி – த்ரில்லர் ஜானரில்  படம் உருவாகிவருகிறது. அதில் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி, நான் கடவுள் ராஜேந்திரன் போன்றவர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். விக்ரமின் தங்கை அனிதாவின் மகனான அர்ஜூமன், இப்படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதுகுறித்து பேசிய இயக்குநர், விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன், ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிப்பதற்காக நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுக்கொண்டுள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இவர்தான் சரியான தேர்வாக இருக்கும் என்று நானும் நினைத்தேன். கதாநாயகனாக இவரை அறிமுகப்படுத்துவதில் சந்தோஷம் என்றார்.