‘கதாநாயகர்களோடு நடிகைகளை ஒப்பிட்டு பேசும் நிலை வரவேண்டும்’ – நடிகை நிவேதா தாமஸ்!

நான் மலையாள குடும்பமாக இருந்தாலும் சென்னையில்தான் வளர்ந்தேன். இதனால் தமிழ், மலையாள மொழிகள் தெரியும், இப்போது தெலுங்கும் கற்றுக்கொண்டேன். கதைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். நடிகர்-நடிகைகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் கதை நன்றாக இல்லாவிட்டால் படம் ஓடாது. எனவே சினிமாவுக்கு கதைதான் ஆத்மா. இந்த வருடம் எனது நடிப்பில் 5 படங்கள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்தது அதிர்ஷ்டம். அந்த நடிகையை விட இந்த நடிகை சிறப்பாக நடித்தார் என்று ஒப்பிட்டு பேசுவது பிடிக்காது. கதாநாயகர்களோடு நடிகைகளை ஒப்பிட்டு பேசும் நிலை வரவேண்டும். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.