கதாநாயகியாக அறிமுகமாகும் அம்மு அபிராமி !

‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி தற்சமயம் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கும் அடவி திரைப்படத்தில் வருண் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அம்மு அபிராமி நடித்து வருகிறார். இதுவரை துணை கதாபாத்திரமாகவே அதுவும் பாதியிலேயே இறந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்தவர் பொழுது கதாநாயகியாக தனது தேர்ச்சி பெட்ரா நடிப்பினால் கதாநாயகியாக உயர்ந்துள்ளார். ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் கே.சாம்பசிவம் தயாரிக்கும் இப்படத்திற்கு சரத் ஜடா இசையமைக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இம்மாதம் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும், அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். இதுவே படத்தின் கதை சுருக்கம்.