கதாநாயகியை முன்னிலை படுத்தும் வேடத்தில் ஆண்ட்ரியா !

கா’ என்றால் இலக்கிய தமிழில் காடு, கானகம் என்று பொருள். இதில், காடுகளில் சுற்றி திரிந்து வனவிலங்குகளை படம் பிடிக்கும் போட்டோ கிராபராக ஆண்ட்ரியா நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், சலீம்கோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன் பொறுப்புகளை நாஞ்சில் ஏற்றுள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறுகையில் ‘மூணாறில், 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இது வரை யாரும் செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். பெரும் பகுதி படப்பிடிப்பு இரவு நேரங் களில் நடைபெற்றது. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் போது, மிகவும் பிரமிப்பாக இருக்கும். எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாச மான ஒரு கோணத்தில் ரசிக்கலாம்’’ என்கிறார், டைரக்டர் நாஞ்சில்.