கதிரின் ‘ஜடா’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!

பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பின்னர் நடிகர் கதிர் நடிப்பில் உருவாகி வரும் ஜடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். மத யானைக் கூட்டம், பரியேறும் பெருமாள், கிருமி என வித்தியாசமான கதையம்சங்களில் நடித்து வரும் கதிர், இந்த படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடிக்கிறார். போஸ்டரில் கால்பந்து ஒன்றுடன் கதிர் அமர்ந்திருப்பது போல  இடம்பெற்றுள்ளது. இயக்குநர் குமரன் இயக்க உள்ள இந்த படத்தை “தி பொயட் ஸ்டுடியோ” தயாரிப்பதுடன், யோகி பாபு நடிப்பதும் உறுதியாகியுள்ளது. கதாநாயகி இன்னும் தேர்வுசெய்யப்படவில்லை.