கதிர் நடிக்கும் ஜடா படக்குழுவின் முக்கிய தகவல் !

பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு படங்களை தொடர்ந்து கதிர் தற்போது ஜடா, விஜய்யுடன் இணைந்து தளபதி 63 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜடா படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்குகிறார். இதில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். ரோஷினி நாயகியாகவும், சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. பொயட் ஸ்டுடியோ மற்றும் சனா ஸ்டுடியோ இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை கவனிக்கிறார்.