கதைகளை தேர்வுசெய்வதில் முதிர்ச்சியான பக்குவம் இருக்கிறது – கீர்த்தி சுரேஷ் !

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் 8 படங்கள் திரைக்கு வந்தன. தற்போது மலையாளத்தில் மரக்காயர், தெலுங்கில் மிஸ் இந்தியா, இந்தியில் மெய்டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சினிமா துறையில் வாய்ப்புகள் கிடைப்பது பெரிய விஷயம். ஓய்வில்லாமல் ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும். எண்ணிக்கையை உயர்த்துவதற்காக கிடைத்த பட வாய்ப்புகளில் எல்லாம் நடிப்பது பிடிக்காது. ஓய்வில்லாமல் இருக்க வேண்டியதுதான் அதற்காக வந்ததையெல்லாம் ஒப்புக்கொள்வது இல்லை. நான் சினிமா துறையில் எனது அப்பா, அம்மா தோளில் இருந்து சினிமாவை பார்த்து வளர்ந்தேன். நடிப்பு விஷயத்திலும் கதைகளை தேர்வு செய்வதிலும் முதிர்ச்சியான பக்குவம் இருக்கிறது. எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் இல்லை. எங்கு எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடப்பேன். சினிமாவில் இயக்குனர்கள் முடிவுதான் இறுதியானது. அவர்கள் எண்ணங்களோடு நாம் பயணம் செய்தால் போதும் எல்லாமே நன்றாக நடக்கும். தெரியாத விஷயங்களை பற்றி அறிய எப்போதுமே எனக்கு ஆர்வம் உண்டு. தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு தெரிந்த வித்தைகள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை இவ்வாறாக தெரிவித்தார்.