கதை சொல்வதில் அட்லீ கெட்டிக்காரர்: ஜாக்கி ஷ்ரோப் !

தளபதி63 படத்தில் விஜய் தற்போது கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார். அதற்காக மிக பிரம்மாண்ட செலவில் கால்பந்து மைதான செட் போட்டு ஷூட்டிங் நடத்தி வருகிறார் அட்லீ. பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப் தான் வில்லனாக நடிக்கிறார். அட்லீ இயக்கத்தில் நடித்தது பற்றி பேட்டி அளித்துள்ள அவர் அட்லீ கதை சொல்கிற விதமும் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திடமிருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு திருப்பும் வித்தையிலும் கெட்டிக்காரர் என கூறியுள்ளார்.