கதை, திரைகதை வசனம் எழுதும் யோகிபாபு!

தமிழ்சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார். ஹீரோவாக ஒருசில படங்களில் நடித்து வந்தாலும் விஜய் 63, சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில், தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க, ராஜசேகர் இயக்குகிறார்.