Cine Bits
கனடா பட விழாவில் திரையிட விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் தேர்வு !

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் வந்தார். இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடைபெற உள்ள சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளது.