கனவுகளை நிறைவேற்ற போராடும் தடகள விளையாட்டு வீரராக ஆதி!

ஆதி விளையாட்டு அடிப்படையிலான ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அறிமுக டைரக்டர் பிரித்வி ஆதித்யா இயக்கும் இந்த படத்தில் ஆதி, தடகள விளையாட்டு வீரராக நடிக்கிறார். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடற்கட்டை கொண்டவர், ஆதி. அதனால்தான் கதாநாயகனாக அவரை தேர்வு செய்தோம். கதாநாயகியாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஐ.பி.கார்த்திகேயன், ஜி.மனோஜ், ஜி.ஸ்ரீஹர்ஷா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது.