கபடி பயிற்சியாளராக களமிறங்கும் தமன்னா !

தமன்னா தற்சமயம் நடித்து வெளிவரவிருக்கும் பெட்ரோமாக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, தட் ஈஸ் மகாலட்சுமி போன்ற படங்கள். அனைத்து படங்களிலும் அழுத்தமான வேடம். விஷால் ஜோடியாக நடிக்கும் ஆக்‌ஷன் படத்தில் ராணுவ உளவு அதிகாரி கதாபாத்திரம். தற்போது தெலுங்கில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதை பெங்கால் டைகர் வெற்றி படத்தை எடுத்து பிரபலமான சம்பத் நந்தி இயக்குகிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் கபடி விளையாடி பயிற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே தமிழில் வெண்ணிலா கபடி குழு உள்பட பல படங்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. அதுபோல் தெலுங்கில் தயாராகும் இந்த படமும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள். கதாபாத்திரம் குறித்து தமன்னா கூறியது கதாபாத்திரம் எனக்கு கிடைப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்த கதாபாத்திரம் எனது மனதுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது” என்றார்.