கபில் தேவ் 83 படத்தில் ஜீவா !

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசினும், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீமும், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிரிமானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்க் சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கபீர்கான் டைரக்டு செய்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். ஜீவாவுக்கு பாராட்டுகளும் குவிகின்றன. 83 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.