கமலின் இந்தியன்-2 படம் நிறுத்தபட்டதா ?

கமல்ஹாசனின் இந்தியன்-2 படம் தயாராகுமா? என்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சந்தேகங்கள் கிளப்பி வருகிறார்கள். இந்த படத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் சில மாதங்களுக்கு முன்பே தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் கமல்ஹாசன் தோற்றத்தில் ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றம் செய்தனர். அதன்பிறகும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வேலைகளில் கமல்ஹாசன் ஈடுபட்டதால் மேலும் தாமதம் ஏற்பட்டது. படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு படம் கைவிடப்பட்டதாக மீண்டும் தகவல் பரவியது. தேர்தல் முடிந்து பட வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கமல்ஹாசன் டெலிவிஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளனர். 3 மாதங்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தேவர் மகன்-2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டு விட்டதாக மீண்டும் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.