‘கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு போட்டுருக்கார்!’ – இளையராஜா 75 நிகழ்ச்சியில் ரஜினியின் சுவாரசிய பேச்சு!

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் `இளையராஜா 75' நிகழ்ச்சி, நேற்று மாலை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் முதல் நாளான சனிக்கிழமையன்று பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். முதல்நாள் நிகழ்வில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில், இளையராஜாவுக்கு தங்க வயலின் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது. முதல்நாள் நிகழ்ச்சியின்  உச்சமாக, இசைஞானி இளையராஜாவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார். நேற்று நடந்த விழாவில் திரையுலகப் பிரமுகர்களுடன் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அப்போது மேடை ஏறிய ரஜினிகாந்த், இளையராஜாவுடன் கலந்துரையாடினார். தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம், 'உங்களுக்குப் பிடித்த ராஜா சார்  பாட்டு எது’ என்று கேட்டார். அதற்கு ரஜினி, 'அவர் இசையமைச்ச எல்லா பாட்டும் எனக்குப் பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளைல வர்ற 'பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டவிட வேற என்ன வேணும். 'ராமன் ஆண்டாலும் ’ பாட்டு இப்ப இதுவா இருக்கு. 'ஊர தெரிஞ்சிக்குட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. இருந்தும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டுருக்காரு’’என்றார். அப்போது பேசிய இளையராஜா, 'இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார்.