கமலுக்கும் எனக்கும் இடையேயான நட்பை கெடுத்து விடாதீர்கள் – ரஜினி !

நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் என்ப அமையும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் நதிகளை இணைக்க வேண்டும். நதிகள் இணைப்பிற்கு ரஜினி ஆதரவு  தெரிவித்துள்ளார். நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது அதில் நதிகளை இணைப்போம் என்று தெரிவித்தனர். அப்படி நதிகளை இணைத்தால் நாட்டில் உள்ள வறுமை ஒழியும். மேலும் கமலுக்கு உங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்டதற்கு, என்னுடைய ஆதரவை தெரிவித்துவிட்டேன் மீண்டும் கேட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பைக் கெடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் நிருபர்கள் தேர்தல் குறித்து கேட்டதற்கு, இது தேர்தல் சமயம் அதனால், சென்ஸ்டிவான விசயங்களை கேட்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.