கமலுடன் இந்தியன் 2ல் இணையும் தர்ஷன் !

தர்ஷனை பிக் பாஸ் கைவிட்டாலும் கமல் கைவிடவில்லை. தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி,சேரன்,கவின் மற்றும் தர்ஷன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் அவருக்கு அடுத்து சாண்டி ஆகிய இருவரும் இறுதி சுற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இதில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியையும், பிக் பாஸ் மீது சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் தர்ஷனுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. கவினை வைத்து நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் தர்ஷனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் தர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.