கமல்ஹாசனுடன் இந்தியன் 2 ல் சித்தார்த்,பாபிசிம்ஹா

கமல்ஹாசன் நடித்து ஷங்கர் டைரக்டு செய்த ‘இந்தியன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. கமல்ஹாசனே கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சித்தார்த், பாபிசிம்ஹா ஆகிய இருவரும் புதுசாக இணைந்து இருக்கிறார்கள்.