கமல் அரசியலின் சுற்று பயணம் பிப்ரவரி 21.

நடிகர் கமல் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் அரசியல் நிகழ்வுகள், மற்றும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தற்போது தனது டுவிட்டரில் தன் அரசியல் பிரவேசம் குறித்து பிப்ரவரி 21 தேதி ராமநாதபுரத்தில் சுற்று பயணத்திற்காக சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று நேரடியாக மக்களை சந்திக்க உள்ளார் என்றும், அதே தேதியில் அவரின் அரசியல் கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் அரசியலில் தீவிரமாக செயல்பட திட்டமிட்டுள்ளதாக, அவரது  ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.