கமல் குடும்பத்துடன் இணைந்த பூஜா குமார் – மீண்டும் சர்ச்சையில் கமல் !

காதல் ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். அதன் பின் சில படங்களில் நடித்தார் பின்பு அமெரிக்காவில் பொய் செட்டில் ஆகிவிட்டார். பின்பு ரீ எண்ட்ரியாக கமலின் விஸ்வரூபம் படத்தின் வழியாக மீதும் திரைத்துறையில் ஆழமாக கால் ஊன்றினார். தொடர்ந்து அவரின் உத்தம வில்லன் படங்களிலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் கமலின் நெருங்கிய தோழியானார். இருவரும் வெளிநாடு சென்றுவந்த புகைப்படங்கள் கூட வெளிவந்தன. இந்நிலையில் கமல்லின் பிறந்த நாளான இன்று (நவ.17)  இன்று கொண்டாடப்படுகிறது. தனது சொந்த ஊரான பரமக்குடியில் கமலின் தந்தைக்கு உருவ சிலையை திறந்துவைப்பதற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். குடும்ப உறுப்பினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர் . அதே சமயம் குடும்ப உறுப்பினர் உடனான போட்டோவில் பூஜாகுமாரும் இருந்துள்ளார். இது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.