கமல்: குட்பை சினிமா…

நடிகர் கமல் முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். அவர் பிப் 21ம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் துவங்க உள்ளார். அதனை தொடர்ந்து அன்றைய தினமே மதுரையில் முதல் மாநாடு நடத்த உள்ளார். அவர் தற்போது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் ஈடுபடுவதால் நடிப்பதற்கு நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை என்றும், ஒரு ஆங்கில டிவி சேனலில் இந்த படங்களுக்கு பிறகு வேறு படம் நடிக்கும் எண்ணமில்லை என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் சினிமாவை விட்டு விலகிவிடுவார் என தெரிகிறது.