கமல் – கௌதமி பிரிவுக்கு காரணம் ஸ்ருதிஹாசனா?

கௌதமி குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.இவர் கடந்த 13 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் கமல் உடன் வாழ்ந்த கௌதமி கமலிடமிருந்து விலகுவதாக தன்னுடைய பிளாகில் அறிவித்துள்ளார். கமல்ஹாசனும் நானும் பிரிந்துவிட்டோம் என்ற கௌதமியின் அறிவிப்பு திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல் – கௌதமி பிரிந்ததற்கு ஸ்ருதிஹாசன்தான் காரணம் என்று பலரும் கூறியுள்ளனர்.பல விஷயங்களில் ஸ்ருதிஹாசனுக்கும் கௌதமிக்கும் ஒத்துப்போகவில்லை என்றும், அதனால்தான் மும்பையில் செட்டிலானாராம் கியுள்ளார் என்றும், படப்பிடிப்புக்காக சென்னைக்கு வரும்போது கூட தன் அப்பா கமல் உடைய வீட்டுக்கு வராமல் ஹோட்டலில்தான் தங்கி வந்தார் என்றும் கூறுகின்றனர்.
இதன் உச்சகட்டமாக சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றபோது கௌதமி உடன் கடும் தகராறில் ஸ்ருதிஹாசன் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.அதனால் கமல்-கௌதமியிடையே பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.