கமல்-சுப்பிரமணியன் சுவாமி இடையே டுவிட்டர் போர்

கமல்ஹாசனுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே ஜல்லிக்கடின் போது தொடங்கிய டுவிட்டர் போர் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளால் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.சமீபத்தில் கமல்ஹாசனை சுப்பிரமணியன் சுவாமி முதுகெலும்பில்லாத முட்டாள் என்று விமர்சனம் செய்ய அதற்கு கமல்ஹாசன், ' நான் முரட்டுத்தனமாக பதில் அளிக்க மாட்டேன். என்னை விட அவருக்கு அரசியல் அனுபவம் அதிகம். எனக்கு சாப்பாட்டில் எலும்பு இருக்கனும், ஆனால் உங்களுக்கு இல்லாமல் இருந்தால் தான் பிடிக்கும் என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசனை வம்புக்கு இழுக்கும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் 'கமல்ஹாசன் படிப்பறிவில்லாத ஆடம்பரமான முட்டாள்.சுப்பிரமணியன் சுவாமியின் இந்த விமர்சனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதில் கூறுவார் என்று எதிர்பார்கப்படுகிறது.