கமல் ஷங்கர் கூட்டணியில் நடிப்பது வாழ்க்கையில் ஒருமுறைதான் அமையும் – பவானி சங்கர்!

இந்தியன் 2 படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர். அவரை தவிர காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். இதில் ஒப்பந்தமானது குறித்து பிரியா பவானி சங்கர் கூறும்போது, ‘டைரக்டர் ஷங்கர் ஆபீசிலிருந்து எனக்கு போன் வந்தது. கமல்ஹாசன், ஷங்கர் என பெரிய கூட்டணி. இதில் 10 நிமிட காட்சியென்றாலும் ஓகே சொல்லிவிடும் மனநிலையில்தான் இருந்தேன். ஷங்கர் ஆபீசுக்கு சென்றதும் 2 மணி நேரம் என்னிடம் படத்தின் கதையை சொன்னார்கள். இப்படியொரு வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை. லீட் கேரக்டர்களில் நானும் ஒருத்தி என தெரிந்தது. படத்தில் நடிப்பதை நீங்கள் யோசித்து முடிவு செய்யலாம் என ஷங்கர் கூறினார். ஆனால் அந்த நிமிடமே நான் நடிக்கிறேன் என தெரிவித்துவிட்டேன். வாழ்க்கையில் ஒருமுறைதான் இப்படி வாய்ப்பு அமையும். அதை மிஸ் செய்ய விரும்பவில்லை’ என்றார்.