கருணாநிதி சிலை திறப்பு விழா – ரஜினி, கமல் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். முதல் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலை திறப்பு விழா கோடம்பாக்கத்த்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.