கருப்பு பணம் காகிதமானது நடிகர்களின் கருத்து

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதது குறித்து நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.கருப்பு பணத்தை மீட்கவும்,கள்ள​ நோட்டை ஒழிக்கவும் மோடியின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.இதில் ரஜினி “புதிய​ இந்தியா பிறந்தது என்றும்”, கமல் “அரசியல் கட்சிகளாலும், முறையாக​ வரி செலுத்துவோராலும் கொண்டாடப்படும் நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.

தனுஷ் தனது டுவிட்டரில் பிரதமரின் நடவடிக்கை வரலாற்று சிறப்பு மிக்கது என்றும்,விஷால் பிரதமரின் இந்த​ புரட்சிகரமான​ செயலை ஜீரணிக்க​ சில​ காலம் ஆகும்.ஆனல், கடவுள் ஆசிர்வதிப்பார் என்று கூறியுள்ளார்.நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கருப்பு பணம் காகிதம் ஆகிவிட்டது என்பதை அறிந்து பலர் கோமாவுக்கு சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.