கர்னாடக பிரச்சனையால் தேவி படத்தை திரையிட எதிர்ப்பு

சிவகார்திகேயனின் ரெமோ,விஜயசேதுபதியின் றெக்க இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாவதால் தேவி படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே டென்ஷனில் இருக்கிறார் பிரபுதேவா. இந்நிலையில் காவிரி பிரச்சனையின் காரணமாக தேவி படத்துக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தேவி படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான பிரபுதேவா கர்னாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் பிரபுதேவா கன்னடத்துக்காரர் என்பதால் தேவி படத்துக்கு எதிர்ப்பு குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. காவிரி பிரச்சனையில்பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் தேவி படத்தை தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக காவிரி பிரச்சனையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பிரபுதேவாவின் தேவி படத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புக்கு அஞ்சிய பல திரையரங்கு உரிமையாளர்கள் தேவி படத்துக்கு தியேட்டர் கொடுக்க தயங்குகிறார்களாம்.