கர்ப்பிணியான எமிக்கு காதலருடன் நிச்சயதார்த்தம் !

நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜார்ஜை காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். எமி ஜாக்சன், ஜார்ஜின் நிச்சயதார்த்தம் நேற்று முறைப்படி லண்டனில் நடந்துள்ளது. நிச்சயதார்த்த பார்ட்டியை பிரமாண்டமாக நடத்தி நண்பர்கள், உறவினர்களை அசத்திவிட்டனர். அந்த பார்ட்டியில் எமி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். எமிக்கு அக்டோபர் மாதம் பிரசவம் நடக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இது திட்டமிடப்படாத கர்ப்பம். இருப்பினும் பெற்றோர் ஆக நானும், ஜார்ஜும் தயாராகியுள்ளோம் என்று எமி முன்பு தெரிவித்தார்.