கர்ப்பிணியின் வயிற்றை தொட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் !

மலையாள நடிகர் சுரேஷ் கோபி லோக்சபா தேர்தலில் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்டார். பிரச்சாரத்தின்போது கர்ப்பிணி ரசிகை ஒருவர் அவரிடம் அன்பு கோரிக்கை விடுத்தார். அதாவது தனது வயிற்றை தொட்டு கருவில் இருக்கும் குழந்தையை ஆசிர்வதிக்குமாறு அந்த பெண் கேட்டார். கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நிறைவேற்ற சுரேஷ் கோபி காரில் இருந்தபடியே அவரின் வயிற்றை தொட்டு குழந்தையை ஆசிர்வதித்தார். அதை பார்த்த ரசிகை மகிழ்ச்சி அடைந்தார்.சுரேஷ் கோபி தன் வயிறை தொட்டதும் அந்த கர்ப்பிணி சந்தோஷமாக சிரிக்கிறார். ஆனால் ரசிகையின் ஆசையை நிறைவேற்றி வைத்த சுரேஷ் கோபியை பிற அரசியல் கட்சியினரும்,இணையதளவாசிகளும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். பொது இடத்தில் ஒரு கர்ப்பிணியின் வயிற்றை இப்படியா தொடுவது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.