Cine Bits
கர்மயோகி எனும் தலைப்பில் வெளியாகவிருக்கும் மோடியின் வாழ்க்கை !

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற படம் ஏற்கனவே வெளியானது. இதில் மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்து இருந்தார். மேரி கோம், சர்பஜித் ஆகிய வாழ்க்கை கதைகளை இயக்கி பிரபலமான ஓமங்க் குமார் டைரக்டு செய்து இருந்தார். இந்த நிலையில் நரேந்திர மோடி வாழ்க்கையை பற்றி இன்னொரு படம் தயாராக உள்ளது. இந்த படத்துக்கு ‘மன் பைராகி’ என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் ‘கர்மயோகி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சஞ்சய் திரிபாதி திரைக்கதை எழுதி இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். நரேந்திர மோடியின் வாழ்க்கையில் இதுவரை சொல்லப்படாத சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.