கலவையான விமர்சங்களை கடந்துவரும் பிகில் படத்தின் நீளம் குறைப்பு !

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது.  படத்தின் வசூல் குறித்து பிரமிக்கத்தக்க வகையில் செய்திகள் வெளியாகிவருகிறது. அதே நேரம் கலவையான பல விமர்சனங்களை பெற்றுவருகிறது. பல படங்களிலிருந்து காட்சிகள் அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்டுள்ளதாகவும், பருமனான பெண்ணை கேலிசெய்வதுபோல் வரும் காட்சியமைப்புகள் இருப்பதாகவும் மேலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டதாகவும் அதை முதலில் அட்லீ மறுத்துவிட்டதாகவும், பின்னர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. எனவே படத்தின் நீளம் கருதி பருமனான பெண்ணை கிண்டலடிக்கும் காட்சி உட்பட ஒரு சில காட்சிகள் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.