கலவையான விமர்சனங்களை கடந்து வசூலில் சாதனை புரியும் தர்பார் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் இந்த படம் சென்னை உள்பட பல நகரங்களில் வசூலில் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய முதல் நாளில் சென்னையில் மட்டும் இந்த படம் ரூபாய் 2.27 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறை இருப்பதால் இந்த படத்தின் வசூலில் அடுத்தடுத்த நாட்களிலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று முதல் காட்சி முடிவடைந்த உடனேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இந்த படம் வெளிவந்து விட்ட போதிலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.