கலவையான விமர்சனங்கள் எதிரொலி – டியர் காம்ரேட் படத்தில் சில காட்சிகள் நீக்கம் !

விஜய் தேவரகொண்டா, மந்தனா ராஷ்மிகா நடிப்பில் உருவான 'டியர் காமிரேட்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிய இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்ததால் நல்ல ஓப்பனிங் வசூல் கிடைத்தது. இருப்பினும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இதன் எதிரொலியாக இப்படக்குழு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர். 'டியர் காம்ரேட்' படம் கலவையான விமர்சனங்களை பெற காரணம், இந்த படத்தின் நீளம் தான். சுமார் மூன்று மணி நேரம் இருக்கும் இப்படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால், நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் அதிரடியாக இந்த படத்தில் உள்ள 14 நிமிடங்கள் காட்சியை கட் செய்துள்ளனர். ஏற்கனவே 170 நிமிடங்கள் ரன்னிங் டைம் உள்ள இந்த படம், தற்போது 14 நிமிடங்கள் கட் செய்து 156 நிமிடங்கள் படமாக இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது.