கலைப்புலி S.தாணு தயாரிப்பில் ரஜினி – மீண்டும் இணையும் கபாலி கூட்டணி!

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் முடிந்ததும் தேர்தலுக்கு முன்பாக இன்னும் மூன்று படங்களில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார், இதில் ஒரு படத்தை சிறுத்தை சிவா இயக்குவது உறுதியாகி விட்டது. ஒரு கமர்சியல் கதையை கூறியதாகவும் அந்த கதை பிடித்து விட்டதால் இந்த படத்தில் நடிக்க ரஜினி உடனடியாக ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பார் என்று உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.