கல்வி மற்றும் பள்ளிகள் குறித்து 100 படங்கள் வந்தாலும் வரவேற்கத்தக்கது – நடிகை ஜோதிகா !

அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து எடுக்கப்பட்டுள்ள 'ராட்சசி' படவிழா சென்னையில்  நடைபெற்றது. அறிமுக இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம்  ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது. கல்வி மற்றும் பள்ளிகள் குறித்து 100 படங்கள் வந்தாலும் வரவேற்கத்தக்கது என நடிகை ஜோதிகா தெரிவித்தார். மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற அக்கறை எல்லோருக்கும் வருவது நல்ல விஷயம்தான். இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு படும் கஷ்டங்கள் குறித்தும் பேசினார் நிறைய அரசு பள்ளிக்கூடங்களில், போதுமான ஆசிரியர்கள் இல்லை. அந்த வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது? அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படி வசதிகளை செய்து கொடுத்த பின், ‘நீட்’ தேர்வு உள்பட எந்த தேர்வை வேண்டுமானாலும் நடத்தட்டும். இதைத்தான் ‘ராட்சசி’ படத்தில் சொல்லி இருக்கிறோம்.