களமிறங்கும் ஹாக்கிப் படை! – ‘நட்பே துணை’ டிரெய்லர்!

'நட்பே துணை' படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டி.பார்த்திபன் தேசிங்கு. ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார் அனகா. படத்துக்கு ஹிப் ஹாப் ஆதியே இசையமைக்கிறார். டிமாண்டி காலனி மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஃபென்னி ஒலிவர் எடிட்டிங் செய்துள்ளார். ஹாக்கியை அடிப்படையாகக்கொண்டு உருவானாலும் குடும்பம், நட்பு, காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கிறது. நட்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படம் தயாராகியுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்குப்பிறகு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.