களறி கற்கும் சாய்பல்லவி !

மாரி 2 படத்தில் நடித்துவிட்டு மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார் சாய் பல்லவி. அதிரன் படத்தில் பஹத் பாசிலுடன் நடித்திருக்கிறார். இதில் மனோதத்துவ நிபுணராக பஹத் பாசில் நடிக்கிறார். களறி சண்டை கற்கும் பெண்ணாக சாய் பல்லவி நடித்திருப்பதுடன் களறி சண்டைக்காக அவர் மெனக்கெட்டு அந்த கலையை கற்றிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் வெறித்தனமாக களறி சண்டை போடுகிறார் சாய் பல்லவி. ‘கேரக்டரை உணர்ந்து அதில் மெய்மறந்து நடிப்பது எனது பாணி. களறி சண்டைக்காக சும்மா கேமராவுக்கு போஸ் தருவதில் எனக்கு விருப்பம் கிடையாது. அப்படி விரும்பும் இயக்குனர்களிடமும் நான் பணியாற்றுவது கிடையாது’ என்றார் சாய் பல்லவி.