களவாணி 2 படத்திற்காக மீண்டும் பிக் பாஸ் இல்லம் செல்லும் ஓவியா !

பிக் பாஸ் முதல் சீசனில் அனைத்து மக்களின் ஆதரவும் பெற்றாலும்,  காதல் பிரச்சினை காரணமாக திடீர் என வெளியேறியவர் நடிகை ஓவியா.  இதைத்தொடர்ந்து அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர வைக்க முயற்சிகள் செய்தும் அது முடியாமல் போனது. இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக வருவது போல் உள்ளே வந்து பிராங்க் செய்துவிட்டு பின் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது சீசனிலும் ஓவியா பிக் பாஸ்  வீட்டிற்குள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் போட்டியாளராக இல்லாமல் 'களவாணி 2 ' படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விமல் மற்றும் ஓவியா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.