களவாணி 3-ம் பாகத்திலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் – விமல் பேச்சு !

களவாணி திரைப்படம் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் இயக்குனர் சற்குணம், நாயகன் விமல் மற்றும் நாயகி ஓவியா ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வாரம் களவாணி 2 திரைப்படம் வெளியாகிறது. அதே சற்குணம், விமல், ஓவியா என்கிற கூட்டணியில் உருவாகி மீண்டும் ஒரு வெற்றியை ருசித்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. நாயகன் விமல் பேசியதாவது, இந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேரளாவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த நேரத்தில் இங்கே கூடவே இருந்து கவனிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. நல்ல கதை அமைந்தால் களவாணி 3-ம் பாகத்திலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அது இன்னும் 10 வருடம் கழித்தும் நடக்கலாம் அல்லது அடுத்த வருடமே நடந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.