கழட்டி விட்ட விஜய்யை விட்டு விட்டு சிம்புவுடன் கைகோர்க்கும் சுதா கொங்கரா !

சுதா கொங்கரா நடிகர் சூர்யாவை வைத்து சூரரை போற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனிடையே நடிகர்  விஜய்யை வைத்து இயக்குவதாக தகவல் கசிந்தது. சுதா இயக்கியுள்ள சூரபோற்று படத்தை விஜய் பார்க்க விரும்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்போது சுதா கொங்கரா அது இயக்கப்போவது விஜய் படத்தை அல்ல. சிம்புவுடன் கைகோர்க்கலாமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணிரத்தினத்திடம் சுதா உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்திலிருந்தே சிம்பு இவரின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். மேலும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்புவை நடிக்க வைக்கலாம் என மணிரத்தினத்திற்கு ஒரு யோசனையை இவர் தான் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே இவர் இப்போது இயக்க உள்ள திரில்லர் கதைக்கு சிம்பு மிகப்பொருத்தமாக உள்ளார் என்பதால் சுதா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.