கவண் படத்தின் வெளிவரும் தேதி எப்போது?

கடந்த 2016 ல் ஆறு படங்களில் நடித்தவர், விஜய் சேதுபதி. அதில் மூன்று படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டிற்கான படங்களில் ஏற்கனவே அவர் தொடங்கிவிட்ட நிலையில், மேலும் பல கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகை மடோனாவுடன் கவண் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தில் டி.ஆர் பாடியுள்ள ஹேப்பி நியூ இயர் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதைய தகவலின் படி படம் வரும் மார்ச் 31 வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.