கவர்ச்சியில் களமிறங்குவாரா கீர்த்தி சுரேஷ் !

ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டிலும் கீர்த்தி ஒரு படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார். தமிழை பொறுத்தவரை கீர்த்தி எந்த படத்திலும் கிளாமர் காட்டி நடித்ததில்லை. ஆனால் பாலிவுட் படங்களில் கிளாமர் காட்டாமல் ஒரு நடிகையால் நிலைத்து நிற்க முடியாது. இதை உணர்ந்து கீர்த்தி அங்கு கிளாமர் காட்டுவாரா அல்லது தனது கொள்கையில் நிலைத்து நிற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.