கவிஞ்சர் வைரமுத்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்க்காக எழுதிய பாடலின் சில வரிகள்!

குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள் என இளம் சமுதாயத்தில் மீது அதிக நம்பிக்கையும், பாசமும் கொண்டவர். இவர் மண்ணுலகை விட்டு சென்று 2 ஆண்டுகள் ஆகப்போகிறது. தற்போது மத்திய அரசு சார்பில் அவருடைய சமாதியில் மணி மண்டபம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 27ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமரும் கலந்துகொள்கிறார். அப்துல்கலாம் அவர்களின் சிறப்பை போற்றி கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். இப்பாடல் திறப்பு விழா அன்று வெளியிடப்படுகிறது. இப்பாடலை இயக்குனர் வசந்த் ஆல்பமாக தயாரிக்க அதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்பாடலின் சில வரிகள் இதோ  …..

கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும்

நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால்

தூங்க விடாததே கனவு என்றாயே